I received all books i ordered in good condition before the date you mentioned. My suggestion is to have on more cover for books. I have given review of the books in Tamil below.
வள்ளலார் பெற்ற ஞான யோக அனுபவம்.
இந்த சிறிய நூலில் பல பொக்கிஷங்களை மஹரிஷி கூறியுள்ளதை நான் பார்க்கிறேன்.
இறைவன் எங்கு இருக்கிறார்?அவருக்கு நாம் செய்யும் கடமை என்ன? இறை வழிபாடு எப்படி செய்வது, அறநெறி என்பது என்ன? கடமை என்பது யாது?
இறைவனை எப்படி அறிவது? இறைவனை அறிய தடுப்பது எது? அந்த தடுப்பது சுவரை நீக்குவது எவ்வாறு? என்பதை தெளிவாக, எளிமையாக கூறுகிறார்.
வள்ளல் பெருமான் கடைபிடித்த 2 வழிகள் எவை? எந்த வழியை நாம் பின்பற்ற வேண்டும். அவர் விரித்த கடை எது? அந்த கடைக்கு எப்படி செல்வது என்பதைக் கூறுபட்டுள்ளது.
கடவுளை நம்புவது எப்படி என்ற கேள்விக்கு பதிலும் மஹரிஷி கூறியிருக்கிறார். வினைப்பயன் எவ்வாறு எற்படுகிறது, மனிதன் ஏன் தவறு செய்கிறான் என்பதை விளக்கியிருக்கிறார். இந்த வினைப்பயனை நீக்குவதற்கும், தவறு செய்யாமல் இருப்பதற்காக மணப்பயிற்ச்சியும் (தவம்), செயலால் நன்னடத்தைப் பயிற்ச்சியும் (அறம்) தேவை என்கிறார்.
இறைவழிபாடும், அறநெறியும் நல்ல பண்பாட்டை உருவாக்கி வினைப்பயன்கள் மற்றும் துன்பங்களை நீக்கி இறைவனோடு இனையலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து காட்டிய மகான்களில் ஒருவர் இராமலிங்க வள்ளலார் என்று கூறுகிறார் மஹரிஷி.
முற்றும்.
17 ஆகஸ்டு 2024