Daily Events & Photos
-
ஆழியார் காயகல்ப கருத்தரங்கிற்கு அழைப்பு.
25-09-23 அன்று காலை சென்னையில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், MGR மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் Dr. சுதா சேஷய்யன் அவர்களை நேரில் சந்தித்து ஆழியார் காயகல்ப கருத்தரங்கில் நிறைவு விழா நிகழ்வில் சிறப்புரையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.
வாழ்க வளமுடன்.
-
நமது யோகா ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் மற்றும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள்.
25-09-23 அன்று காலை சென்னையில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களை சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர் பணிக்கு நியமிக்கப்பட்ட நமது ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் விடுத்தார்கள். மேலும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள். உடன் பொதுச்செயலர் Dr. TKS. சேகர், R&D இயக்குனர் அ/நி R. குற்றாலம் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.
-
தெலுங்கானா ஆளுநர் உடன் சந்திப்பு
09-09-23 அன்று காலை ஹைதராபாத் ராஜ் பவனில் தெலுங்கானா மேதகு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்தார்கள். உடன் WCSC- VSP இயக்குனர் அருள்நிதி P. முருகானந்தம் அவர்கள்.
வாழ்க வளமுடன்
-
திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.
03-09-23 அன்று காலை திண்டுக்கல் மண்டலம் போடிநாயக்கனூரில் விரிவாக்கப்பட்ட அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். 300 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்க வளமுடன்
-
கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.
27-08-2023 அன்று காலை இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 மாடிகள் கொண்ட கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்க வளமுடன்.
-
YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17-08-23 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் ,பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. S. கௌரி அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்.
வாழ்க வளமுடன்
வேதாத்திரி மஹரிஷியின் 113 -வது ஜெயந்தி உலக அமைதி தின விழா
வேதாத்திரி மஹரிஷியின் 113 -வது ஜெயந்தி உலக அமைதி தின விழா
வேதாத்திரி மஹரிஷியின் 113 -வது ஜெயந்தி உலக அமைதி தின விழா
வேதாத்திரி மஹரிஷியின் 113 -வது ஜெயந்தி உலக அமைதி தின விழா
-
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17-07-23 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள், துணைவேந்தர் Dr. V. திருவள்ளுவன் அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்.
வாழ்க வளமுடன்.
-
தலைமைச் செயலாளர் உடன் சந்திப்பு.
06-07-23 அன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உயர்திரு சிவ்தாஸ் மீனா IAS அவர்களை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். உடன் விஷன் இயக்குனர் (பொது) மு. பே. Dr. N.A. பெருமாள் அவர்கள்.
வாழ்க வளமுடன்.
-
உயர்கல்வித்துறை செயலாளர் உடன் சந்திப்பு.
06-07-23 அன்று காலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் உயர்திரு A. கார்த்திக் IAS அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து பல்கலைக்கழகங்களில் YHE படிப்புகள் தொடர proposal வழங்கினார்கள். உடன் விஷன் இயக்குனர் (பொது) Dr.N.A. பெருமாள் அவர்கள்.
வாழ்க வளமுடன்
-
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
15-06-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களுடன் துணைவேந்தர் Dr. குமார் அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்.
வாழ்க வளமுடன்.
-
வேலூர் இராசிமலை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.
28-03-23 அன்று காலை திருவண்ணாமலை மண்டலம் வேலூர் இராசிமலை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இதில் 500 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இது 208 வது அறிவுத் திருக்கோயில்.
வாழ்க வளமுடன்.
-
பல்கலைக்கழக மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான யோகா படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
15-05-23 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதனோடு இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான Yoga for Human Excellence படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU நடைபெற்றது. இந்திகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. வேல்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்க வளமுடன்.
-
தாம்பரம் மாநகர் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.
14-05-23 அன்று காலை காஞ்சீபுரம் மண்டலம், குரோம்பேட்டை ராதாநகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்ட தாம்பரம் மாநகர் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவரகள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இது 207 வது அறிவுத்திருக்கோயில்.
வாழ்க வளமுடன்.
-
Andrapradesh Vethathiri Gramam (VSP) Invitation.
Kaayampetta, Andrapradesh Vethathiri Gramam (VSP) invitation given to Minister Roja on 10-05-2023.
வாழ்க வளமுடன்.
-
Andrapradesh Vethathiri Gramam (VSP) Invitation.
Kaayampetta, Andrapradesh Vethathiri Gramam (VSP) invitation given to Director Mr. RK. Selvamani on 10-05-2023.
வாழ்க வளமுடன்.
-
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17-04-23 அன்று மதியம் உலக சமுதாய சேவா சங்கமும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமும் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. M. சுந்தர் அவர்கள் மற்றும் விஷன் இயக்குனர்கள் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.
-
திருவள்ளுவர் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
13-03-23 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ஆறுமுகம் அவர்கள், நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நமது இயக்குனர் பெருமக்கள் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.
-
யோகா பட்டப்படிப்புகள் தொடர்ந்து நடைபெற முன்மொழிவு.
10-03-23 அன்று மதியம் சென்னை SRM பல்கலைக்கழக வேந்தர் திரு. பாரிவேந்தர் M.P அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து யோகா பட்டப்படிப்புகள் தொடர்ந்து நடைபெற proposal வழங்கினார்கள். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் விஷன் இயக்குனர் (பொது) Dr. N.A. பெருமாள் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.
-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி.
10-03-23 அன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் கொடுக்க proposal வழங்கினார்கள். உடன் துணைத்தலைவர் முதுநிலை பேரா Dr.N.A. பெருமாள், பொதுச் செயலர் Dr.TKS சேகர் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.
-
Indian Yoga Association ன் தமிழ்நாடு தலைவராக நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
28-02-23 அன்று காலை Indian Yoga Association- Tamilnadu Chapter ன் Executive Committee meeting சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டு Indian Yoga Association ன் தமிழ்நாடு தலைவராக நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள்.
வாழ்க வளமுடன்.
-
SKY Yoga for free to students in Tamil Nadu.
WCSC President Padmashree A/N SKM Maeilanandan met Education Secretary Sri. K. Nandakumar IAS to submit a proposal to teach Vethathiri SKY Yoga for free to students in Tamil Nadu.
-
SKY Yoga to all police personnel in Tamil Nadu.
On 07 Jan 2023 WCSC President Padmashree A/N. SKM. Maeilanandhan met DGP Dr. C. Sylendra Babu IPS to propose teaching Vethathiri SKY Yoga to all police personnel in Tamil Nadu.