சிரம்பான் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா

சிரம்பான் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா

01-05-2024 அன்று மலேசியா சிரம்பான் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் அறிவுத்திருக்கோயிலை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள். துணைத்தலைவர்கள் K.R. நாகராஜன், P.K. ஆறுமுகம், SKY V. சுந்தரராஜ், மு.பே. உழவன் தங்கவேலு, பொதுச்செயலர் Dr. S. சேகர், இயக்குனர்கள், மண்டலத்தலைவர்கள், உலகெங்கிலும் இருந்து அன்பர்கள் கலந்து கொண்டனர். 1500 க்கும் மேற்பட்ட அன்பர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான விழா. மலேசியா ஒருங்கிணைப்பாளர் பேரா. ஆறுமுகம், பேரா. சாரதா ஆறுமுகம் தம்பதியரின் அர்ப்பணிப்பால் உருவாகியுள்ளது. இது 212 வது அறிவுத்திருக்கோயில்.

வாழ்க வளமுடன்.