உடலோடு உரையாடு…

Posted by Editor on Oct 23, 2017

உடலோடு உரையாடு… எங்கோ ஒரு மூலையில் காலை இடித்துக் கொண்டு வலிதாங்க முடியாமல் போகும் போதுதான் நம் காலை,பாதத்தை பார்க்கிறோம். தினசரி வேலைகள் தடைபடும் அளவிற்கு கை வலிக்கும் போதுதான் கைகளை கவனித்து அதை குறித்து ஆராய்கிரோம். நாம் அடியெடுத்து நடை பழக ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் கால்களும் பாதங்களும் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறது என நாம் சிந்தித்திருக்கிறோமா? இந்த கைகள் இல்லாமலோ இல்லை குறைபாடோடு இருந்திருந்தாலோ நாம் எப்படி இருந்திருப்போம் என […]

ஒரு புதுமைப் பயணம்!

Posted by Editor on Oct 14, 2017

ஒரு புதுமைப் பயணம்! நம் தினசரிகளில் காலையில் எழுந்தது முதல் நம் பேருந்து பயணம் துவங்கி வாழ்க்கைப் பயணம் வரை ஒவ்வொரு விஷயத்திற்கும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என ஏராளமான பிரச்சனைகள் நம்மை விட வேகமாய் ஓடி நம்மை துரத்துகின்றன. நாமும் அதைவிட வேகமாய் ஓடத்தான் முயற்சிக்கிறோமே ஒழிய என்றாவது ஒரு நாள் அதற்கான காரணங்களை அறிய பின்னோக்கி பயணித்திருக்கிறோமா? துன்பத்தின் மூலகாரணங்களைப் பற்றி அறிய முயற்சி செய்திருக்கிறோமா? […]

அறிவியல் வளர்கிறது! அறவியல் தேய்கிறது!!!

Posted by Admin on Sep 4, 2017

தலைப்பு மகிழ்ச்சியினையும், அதே நேரத்தில் ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கின்றது.  ”அல்லவை தேய அறம் பெருகும்” என்றார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  அவதரித்த செந்நாப்புலவர் திருவள்ளுவர்.  அன்றிருந்த மனிதகுல நிலையைக் கண்டு, அறம் வளர வேண்டும் மனிதகுலத்தில் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.  அதற்கு  அல்லவை(நல்லவை அல்லாதவைகள்) மறைய வேண்டும் என்கின்ற தீர்வையும் கூறுகிறார்.  எவ்வாறு அல்லவை  மறைய முடியும்? சிந்திப்போம். எல்லா ஆசைகளிலும் முதன்மை வகிப்பது எது? உயிரினால்தான் மனித வாழ்வு நடந்து கொண்டிருக்கின்றது.  உயிரில்லையேல் வாழ்வு ஏது?.  உயிரால்தான் […]

தாய்மையே தலைசிறந்தது…

Posted by Admin on Sep 1, 2017

    வாழும் மானுடத்தின் வணக்கத்துக்குரியவர் தாயார். தன் வயிற்றயே வீடாக்கி வளருகின்ற உயிருக்குகாக தன் சுவை உணர்வுகளையே கட்டுப்படுத்திக் கொள்வது தாய்மை. அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்தவுடன் அதன் நலத்திற்காகத் தன் சுக துக்கங்களை மறந்து தன்னலங்களையே துறந்துவிடுவது தாய்மை.     தன் தாயின் தொண்டினை மகரிஷியே பின்னாளில் நினைத்து தாய்மையைப் போற்றுகின்றார். தாய்மை தியாக களஞ்சியம் அல்லவா?   குழந்தை வேதாத்திரியின் மீது தாயின் பாசம் அளவிட முடியாதது. அவரது தாய் வேதாத்திரிக்குக் காட்டிய அன்பையும் பாசத்தையும் […]

தவமாய் தவமிருந்து…

Posted by Admin on Nov 7, 2016

மானுட வாழ்க்கை குழந்தையினால் முழுமை பெறுகிறது. மங்கல மனைமாட்சியில் நல்லணி,நன் மக்களைப் பெறும் பேறாகும். “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” குழந்தை உற்பத்தியானது பெற்றோர்களின் உடல்,உயிர்,அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறு அமையும்.எனவே, நன்மக்களைப் பெறத் தவமிருப்பது அக்கால வழக்கம்.இயற்கை தகவமைப்பில் அவ்வப்போது சரிசெய்யப்படவேண்டிய விநாடிகள் வருகிற போது, இயற்கைமகான்களைப் பிரசவிக்க பொருத்தமான கருவறையைத் தேடிக்கொண்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் அறிவியலையும், ஆன்மீகத்தையும்,விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும், தத்துவக் கருத்துக்களையும் பாமரர்களிடமும் சென்றடைய தகுதியான ஒரு மகானைக்கருக் கொண்ட இயற்கை […]