ஒரு புதுமைப் பயணம்!

Posted by Admin on Oct 14, 2017
campus

ஒரு புதுமைப் பயணம்!

நம் தினசரிகளில் காலையில் எழுந்தது முதல் நம் பேருந்து பயணம் துவங்கி வாழ்க்கைப் பயணம் வரை ஒவ்வொரு விஷயத்திற்கும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என ஏராளமான பிரச்சனைகள் நம்மை விட வேகமாய் ஓடி நம்மை துரத்துகின்றன. நாமும் அதைவிட வேகமாய் ஓடத்தான் முயற்சிக்கிறோமே ஒழிய என்றாவது ஒரு நாள் அதற்கான காரணங்களை அறிய பின்னோக்கி பயணித்திருக்கிறோமா?

துன்பத்தின் மூலகாரணங்களைப் பற்றி அறிய முயற்சி செய்திருக்கிறோமா? அதிலிருந்து விலகி ஓடுவதை விட்டுவிட்டு விடுபடும் வழியை தேடியிருக்கிறோமா? தேடல்களும் , கேள்விகளும் சரியான பாதையில் பயணிக்கும் போதுதான் இலக்குகளை அடைய முடிகிறது. முழுமையானதாகவும் அமைகிறது.

உங்களின் கேள்விகளுக்கான பதில்களாய்.. உங்கள் தேடல்களின் தீர்வாய் இதோ ஒரு அறிவின் வாசல் உங்களை அன்போடு அழைக்கிறது. ஆண்டாண்டுகளாய் உங்களை துரத்திய பிரச்சனைகளுக்கு ஐந்தே நாட்களில் தீர்வுகளை அறிமுகப்படுத்தி வைக்கிறது.மிக மிக எளிமையான உடற்பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகள் உடலளவில் மனதளவில் உங்களுக்குள் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, மனநிறைவு என அடியெடுத்து வைக்கிறது.

“மனவளக்கலை” எனும் உன்னதமான புதுமைப் பயணத்தில் இணைவோம்! பயணித்துக் கொண்டிருப்போா் புதியவர்களை இணைப்போம்!
வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!