உள்ளம் நிறைய உள்ளதை கொடு…(கொடுப்போம்…)

Posted by Admin on Oct 26, 2016
stock-photo-12056329-handing-plant

அழகிய சோலைகளின்

நடுவில் குட்டி இராஜியம் – கிராமம்

எங்கும் விவசாயியின் மண்வாசணை

பூத்து குலுங்கும் பூக்கள்

வழி எங்கும் வரவேற்கும்

பசுமை மாறாத வயல்வெளிகள்

தொட்டு தடவி நழுவும்

பச்சிளம் விரலின்

ஸ்பரிச உணர்வை உணர்த்தும்..!

 

இவ்வாறு இருந்த கிராமங்கள் இன்று, வருமானத்திற்காக மக்கள் விட்டு பிரிந்ததால் பட்டுபோய், வற்றிபோய்விரிசல் விட்டு நம்மை கண்களில் நீர் கசிய வைக்கிறது..! எத்தனை துன்பம் வந்தாலும் மண்ணை விட்டு பிரியாமல் வறுமையில் வாடும் மக்கள் ஒரு பக்கம், வறுமையினால் தீயவைகளை செய்து சீர்கெட்டு அழிந்துகொண்டிருப்போர் மறுபக்கம்.

இவைகளை மாற்றி  மக்களின் வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்தி, அவர்களுக்குள் மாற்றங்களை உருவாக்கி தன்னம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் ஏற்படுத்த உலக  சமுதாய சேவா சங்கம் கிராமங்களை தத்தெடுத்து கிராம மக்களுக்கு மனவளக்கலை யோக பயிற்சிகளை அளித்து வருகிறது. இதுவரை 69 கிராமங்களை தத்தெடுத்து சிறப்பாக பயிற்சி அளித்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்  எண்ணிலடங்கா. அனைத்து கிராமங்களையும் மாற்ற வேண்டும் என்றநோக்கில் கர்மயோக காப்பாளர்களால் ஒரு நாளைக்கு 1ரூ வீதம் 365 நாட்களுக்கு 365 ரூபாய் நன்கொடை என்ற திட்டத்தின் மூலம் இதை மேலும் வளர்ச்சிக்கு கொண்டு செல்லுகிறது.

 

 

ஈதல் அறம்என்றார் ஒளவையார்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

                                              ஊதியம் இல்லை உயிர்க்கு.” – என்கிறார் திருவள்ளுவர்

பிற உயிரைத் தன்னுயிர் போல் மதிப்பது உயர் பண்பு ”  என்பது ஈகை.

தன் வருமானத்தில் 1ரூ சமூகத்திற்காக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.              – வேதாத்திரி மகரிஷி

 

what-is-gift-aid

 

செல்வம் என்பது அனைவரின் வாழ்விலும் மோதி சுழன்று கொண்டு இருக்கிறது.மரணம் தான் அதன் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்கிறது.

சற்றே சிந்திப்போம்!

 

நாம் அவ்வாறு இல்லாமல் நம் அறிவில், பொருளில்,அனுபவத்தில் திறமையில் மற்ற சூழ்நிலை அமைப்பில், வயதில், உடல்நலத்தில் எங்கே இருக்கிறோம் என்பதை கணித்துக் கொண்டு எப்போதும் பிறருக்கும், சமுதாயத்திற்கும் நம்மாலான உதவிகளை செய்வோம். நாம் மண்ணில் வாழும் காலம் வரை நாமும் மகிழ்வாய். வாழ்வோம், பிறரையும் மகிழ்வித்து நிறைவாய் வாழ வைப்போம்.

 

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!